இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையை ரத்துச் செய்க! நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ரத்துச்செய்யக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உாிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியியல் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த உடன்படிக்கை நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இந்திய பெற்றோலியத்துறை அமைச்சின் துணை நிறுவனமான லங்கா ஐஓசி, ட்ரின்கோ பெற்றோலியம் டேமினேட்டட் பிரைவேட் லிமிடெட் ஆகியன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. அமைச்சரவையும் இதற்கு தமது ஒப்புதலை வழங்கியிருந்தது.
இதன்படி 61 எண்ணெய் குதங்கள், ஐஓசி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன கூட்டாண்மையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஏற்கனவே ஐஓசி கொண்டுள்ள 14 குதங்கள் அந்த நிறுவனத்துக்கே 50 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
24 குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிர்வகிக்கும்.