திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்: தெய்வாதீனமாக உயிர் பிழைத்த குடும்பம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றியுள்ளது.
கணவன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உறவினர்களின் வீட்டுக்கு வவுனியா சென்று கொண்டிருந்த போது மிரிஸ்வெவ பகுதியில் வைத்து இன்று (05) காலை இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் திருகோணமலை அன்புவெளிபுரம்- அண்ணா வீதியில் வசித்து வரும் கிரீஸ்கந்ததேவன் சஞ்சீவதரன (32 வயது) என்பவருடைய மோட்டார் சைக்கிளே தீப்பற்றியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த அனர்த்தம் தொடர்பில் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் தீ பற்றியதற்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan