பொதுமக்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் வேண்டுகோள்
கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தை சுகாதாரத் துறை அடையாளம் கண்டுள்ளதால் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
வீதித் தடைகளை தவிர்த்து பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்குமாறு ஆளுநர் இன்று (23) பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், திருகோணமலையில் விசேட பாதுகாப்பு திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்துமாறும் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும் அனைவருக்கும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஆளுநர் அனுராதா யகம்பத் பாதுகாப்பு படையினருக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ள கோமரங்கடவல மற்றும் பதவி ஸ்ரீபுர பகுதிகளில் இருந்து திருகோணமலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிறுநீரக நோயாளிகளுக்கு கோவிட் -19 தொற்று மிக வேகமாக இருப்பதை சுகாதாரத்துறை
வெளிப்படுத்தியுள்ளதால் ஆளுநர் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam