ஜனாதிபதியுடன் திருகோணமலை சைவ அமைப்புகளின் இணைய சைவசமய குரு கலந்துரையாடல்
சைவ சமய உயர் பீடத்தின் சார்பாக திருகோணமலை தென் கயிலை ஆதீன குரு மகாசந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளாரின் அருளாணையுடன் சைவசமயக்குரு அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(9.9.2026) இடம்பெற்றுள்ளது.
வடகிழக்கை தலைமையமாகக் கொண்ட சைவ சித்தாந்த மெய்யியலை போற்றும் உயர் கட்டமைப்பு சார்பாக சைவசமயி ஒருவர் அண்மைக்கால அரச உயர் சந்திப்பில் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
கலந்துரையாடல்
சைவ அமைப்புக்களின் வவுனியா சிவன் கோவில் தீர்மானம் ஜனாதிபதியிடம் இந்து கலாச்சார பணிப்பாளர் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டது.

மகாநாயக்க பீடங்கள், ஆயர் இல்லங்கள் போன்று சைவ ஆதீனங்களே சைவசமயத்தின் முதன்மைத் தலைமைப்பீடங்கள் என சைவ அமைப்புகளின் இணைய சைவசமய குரு அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியரால் சுட்டிகாட்டப்பட்டது.
ஜனாதிபதியின் கூட்ட முக்கிய விடயதானமான போதை ஒழிப்பில் சைவசமய குருமாரின் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டது.