திருகோணமலை - கொழும்பு குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை ஆரம்பம்
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு பகல் நேரத்தில் குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்து சேவையில், குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை இல்லாத குறைபாட்டினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அண்மையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அதற்கமைய, தற்பொழுது திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு பகல் நேரத்தில் குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேரடி விஜயம்
இதனை, அண்மையில், திருகோணமலை தொடருந்து நிலையத்திற்கு நேரடியாக விஜயம் செய்த இம்ரான் மஹ்ரூப் பார்வையிட்டதுடன் அதில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்துள்ளார்.
தொடர்ந்து, இந்த குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையினை நிரந்தரமாக்குவதற்கும், அந்த தொடருந்து சேவையில் சிற்றுண்டிச்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கும், மூதூரில் முன்கூட்டிய ஆசனப்பதிவு செய்யும் நிலையமொன்றினை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து திணைக்கள முகாமையாளர் பண்டாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
