திருகோணமலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை
திருகோணமலை நகரப் பகுதியில் முதியவர் ஒருவர், பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(24.04.2026) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீதியோரத்தில் சடலமாக காணப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவர் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் உறுதியாக கிடைக்கப்பபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இவரைப் பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் இருப்பின் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri