திருகோணமலையில் அதிகாலை நேர்ந்த கோர விபத்து: ஒருவர் பலி
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம் வயது (33) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு அவரோடு மோட்டார் சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் ஜனாஸா ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா ஜனாஸாவை பார்வையிட்ட பின்னர் ஜனாஸா பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
