ஹெரோயின் போதைப் பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது
ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்றிரவு (29) கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை-லல்லேன் பகுதியில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
குறித்த சந்தேகநபரை பின் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரை சோதனையிட்டபோது 05 கிரேம் 50 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 2 கிரேம் 60 மில்லி கிரேம் ஜஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை லல்லேன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரின் முன் குற்றங்கள்
தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினம் திருகோணமலை
நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 நாட்கள் முன்

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
