தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் மலர் தூவி அஞ்சலி
மட்டக்களப்பில், உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றுள்ளது.
அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகியிருந்தது.
அஞ்சலி நிகழ்வு
மேலும், இன்று (19.04.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகிறது.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து 1988 ஏப்ரல் 19ஆம் திகதி அன்னை பூபதி உயிர் துறந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்து.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
