டெங்கு ஒழிப்புக்காக களமிறங்கும் முப்படை- நாளை முதல் விசேட கூட்டு நடவடிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakesh Jul 15, 2026 05:02 AM GMT
Report

இலங்கையில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் புதிய விசேட கூட்டு ஒழிப்பு செயற்றிட்டமொன்று நாளை((16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் குறிப்பிடுகையில், "நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 69 ஆயிரத்து 951 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தென்னிலங்கை அரசியலில் சிதையும் சுரேஷ் சலேயின் குடும்பம் - தப்பியோடும் அரசியல்வாதிகள்

தென்னிலங்கை அரசியலில் சிதையும் சுரேஷ் சலேயின் குடும்பம் - தப்பியோடும் அரசியல்வாதிகள்

அதிகளவிலான தொற்றாளர்கள் 

குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 14 ஆயிரத்து 572 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு தொற்று காரணமாக இதுவரை 48 மரணங்கள் சம்பவித்துள்ளன.

டெங்கு ஒழிப்புக்காக களமிறங்கும் முப்படை- நாளை முதல் விசேட கூட்டு நடவடிக்கை | Tri Services To Launch Joint Operation Dengue

தற்போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும், தற்போதைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சதவீத அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 20.6 சதவீதமும், கொழும்பு மாவட்டத்தில் 20.2 சதவீதமும் பாதிப்புகள் காணப்படுகின்றன.

மேலும், களுத்துறை, கொழும்பு மாநகர சபை எல்லைகள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, 'தூய்மையான இலங்கை' திட்டத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் புதிய விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்கள்

முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் ஒரு வார காலத்துக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.

டெங்கு ஒழிப்புக்காக களமிறங்கும் முப்படை- நாளை முதல் விசேட கூட்டு நடவடிக்கை | Tri Services To Launch Joint Operation Dengue

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கும் தலா 10 குழுக்கள் வீதம் நிறுத்தப்பட்டு, வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஒரு வார காலத்தின் பின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். 

பொதுமக்கள் தங்களின் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்தத் தேசியப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நீர் சேமிப்புத் தொட்டிகள் மற்றும் கொள்கலன்களை முறையாக மூடி வைப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும்" என்று வைத்தியர் கபில கன்னங்கர, பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு நுளம்பின் பரவல் எல்லை 150 மீற்றர் வரை உள்ளதால், தனிநபர் பொறுப்புடன் சமூகக் கூட்டுப் பொறுப்பும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்

கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US