மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர்கள் மூவர் படுகாயம்
ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலேயே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று கடும் காற்றுடன் மழை பெய்துள்ளதனால் மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து பஸ்தரிப்பிடம் மீது விழுந்துள்ளது.
பஸ் தரிப்படமும் முழுமையாக சேதமடைந்து, அதற்குள் இருந்த
இளைஞர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரதேச வாசிகள் இணைந்தே மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தனர்.










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
