மாஞ்சோலை வைத்தியசாலைப்பகுதி : அச்சத்தை ஏற்படுத்துவதாக முறைப்பாடு
முல்லைத்தீவில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னுள்ள பட்ட வேம்பு ஒன்று அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்களில் பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.
பெரிய விருட்சமாக இருந்த இந்த வேம்பு தற்போது இறந்துவிட்ட நிலையில் இலைகள் உதிர்ந்த கிளைகளை மட்டும் கொண்டுள்ளது.
அக்கிளைகளும் உக்கலடைந்து செல்கின்றதால் அதன் காட்சித் தோற்றம் முறிந்து விழுவதைப் போல் இருப்பதால் அச்சத்தை ஏற்படுத்துவதாக உணரப்படுகின்றது.
அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்
வீதியின் ஓரமாக இருக்கும் இந்த வேம்பு அவ்வீதியினால் பயணிக்கும் மக்களுக்கு அச்சுறுத்துவது போல் இருப்பதை படங்களில் காணலாம்.
மாஞ்சோலை வைத்தியசாலை என மக்களால் விழிக்கப்பட்டு அழைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னுள்ள வீதி ஒன்றிலேயே இந்த பட்டவேம்பு மரம் அச்சுறுத்தியவாறு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச சபை என்பன இணைந்து இந்த பட்ட வேப்ப மரத்தினை அகற்றி அதனால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அப்பாதையினை பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் பலரின் கருத்துக்களாக இருப்பதும் நோக்கத்தக்கது.
பொறுப்பானோர்
கிராம அபிவிருத்தி சங்கம் உள்ளிட்ட கிராம பொது அமைப்புக்களும் அவற்றை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள கிராம நிர்வாகியான கிராமசேவகரும் இது தொடர்பில் கவனமெடுத்தல் அவசியமாகும்.
துன்பம் வரும் முன் அதை அறிந்து அதற்கான காரணத்தை நீக்கி விடுதலே அறிவுடைமை ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
