வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரம்
வவுனியா- குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இன்று(22.02.2025) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மன்னார் வீதி, குருமன்காடு சந்திப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றின் முன்னால் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், அதில் முதிய பெண்மணி ஒருவரும் இருந்துள்ளார்.
முழுமையாக சேதம்
இதன்போது தனியார் மருத்துவ மனை முன்பாக வீதியில் நின்ற மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது. மரம் முறிந்து விழுவதை அவதானித்த முதிய பெண்மணி, முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி ஓடியதால் பாதிப்புக்கள் இன்றி தப்பியுள்ளார்.
முச்சக்கர வண்டி மீது மரம் விந்ததால் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது. பின்னர் மரத்தின் கொப்புகளை வெட்டி முச்சக்கர வண்டியை மீட்ட போதும் அது முழுமையாக சேதமடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



