நானுஓயாவில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிதம்
நானுஓயா - உடரதல்ல பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்தன் காரணமாக உடரதல்ல மற்றும் கிளாசோ பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு சில மணிநேரம் போக்குவரத்து ஸதம்பிதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நானுஓயா பொலிஸார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பகுதியளவில் சேதமடைந்த வீடு
மரம் முறிந்து விழுந்ததையடுத்து அருகில் இருந்த வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள், மின்கம்பிகள் மீது விழும் சம்பவம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri