இன்னும் 2 நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
தற்போதைய மழைக்கால வானிலை நிலவுவதற்கு, தென்மேற்கு பருவமழை நிலைமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோவின் தகவலின்படி, இலங்கையின் அருகாமையில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகொண்டுள்ளது.
திடீர் மாற்றம்
எனினும், இந்த தாழ்வு நிலை, காற்றின் ஓட்டத்தில் மறைமுக விளைவை மட்டுமே ஏற்படுத்துகிறது.
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உட்பட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்வதும், பின்னர், குறுகிய காலத்திற்குள் அது நின்றுவிடும் நிகழ்வுகள், காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் நிகழ்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2025 மே 31 க்குப் பின்னர், தற்போதைய வானிலை நிலைமைகளின் தீவிரம்; குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
