நான்கு வயது யானைக் குட்டிக்கு சிகிச்சையளிப்பு
தம்பலகாமம் - கல்மிட்டியா குளத்திற்கு அண்மித்த பகுதியில் ஆற்றில் விழுந்து சிக்கியிருந்த நான்கு வயது காட்டு யானைக் குட்டிக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்பலகாமம் கல்மிட்டியா குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவரின் தகவலின் அடிப்படையில் குறித்த யானைக் குட்டி தொடர்பில் தெரியவந்துள்ளது.
யானைக் குட்டிக்கு சிகிச்சை
அதன் பின்னர் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, யானைக் குட்டிக்கு சிகிச்சை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
குறித்த யானைக் குட்டி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே ஆற்றில் விழுந்திருக்கலாம் என்றும், கடந்த இரண்டு நாட்களாக கந்தளாய் வனவிலங்கு மருத்துவர்கள் குழு ஒன்று தீவிரமாக சிகிச்சையளித்து வருவதாகவும் கந்தளாய் வன விலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .










கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
