தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்
கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேரமடு பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(18) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 57 வயதுடைய பிரசன்னா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று பிரசன்னா தனது நண்பருடன் பேரமடு காட்டுப் பகுதிக்குத் தேன் எடுக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியுள்ளது.
இதனையடுத்து, அவருடன் சென்ற நண்பர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று பொலிஸாருக்கும், வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், கிராம மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தியபோது, காட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரசன்னாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
சடலம் தற்போது கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
