இலங்கைக்கு செல்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு
இலங்கையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள், இறுக்கமான நுழைவு விதிகள் மற்றும் அரசியல் அமைதியின்மை அச்சுறுத்தல் காரணமாக ஜேர்மன், தன் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி இலங்கை, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்..
இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் முதல் மொராக்கோவின் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரை, ஜேர்மனின் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை உலகளாவிய பயணத்தின் வளர்ந்து வரும் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில், இலங்கை தொடர்பில் ஜேர்மன் புதுப்பித்துள்ள பயண எச்சரிக்கை, பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ளது.
அவற்றில், 2022 ஆம் ஆண்டு தேசிய அளவில் திவால்நிலை ஏற்பட்டதிலிருந்து இலங்கை தொடர்ச்சியான சவால்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக பலப்படுத்தப்பட்டிருந்தாலும், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் போராட்டங்கள் இன்னும் அதிகரித்து வருவதால், நிலைமை நிலையற்றதாகவே உள்ளது என ஜேர்மன் தெரிவித்துள்ளது.
அசாதாரண சூழ்நிலை
இலங்கைக்கான ஜெர்மனியின் பயண ஆலோசனை, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில், நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை மோதல்கள் காரணமாக பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கூடுதலாக, இலங்கையிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் பயணிகளுக்கான நுழைவு விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, இதனால் விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புடன், விரிவான விசா விண்ணப்பங்களும் தேவைப்படுகின்றன.
உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், குறிப்பாக மதத் தலங்கள் மற்றும் சர்வதேச சந்திப்பு இடங்களைச் சுற்றி விழிப்புடன் இருக்கவும் தன் நாட்டு மக்களை ஜேர்மன் அறிவுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜேர்மன் இலங்கை தொடர்பில் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளமை, நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்புவதுடன் சுற்றுலா துறையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        