நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டில் செவ்வந்திக்கு காத்திருந்த சிக்கல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான போலி துருக்கிய கடவுச்சீட்டினை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஜே.கே. பாய், செவ்வந்தியை போல தோற்றமளிக்கும் தக்ஷி என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அழைத்து வந்து மற்றொரு போலி கடவுச்சீட்டினை தயாரித்ததாகவும் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி என்ற பெண் இஷாரா செவ்வந்தியை போலவே இருந்ததால், அவர் நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு, தனது கடவுச்சீட்டினை பயன்படுத்தி மற்றொரு போலி கடவுச்சீட்டினை உருவாக்கி, துருக்கிக்குச் சென்று பின்னர் மலேசியாவுக்குச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரகசிய விசாரணை
இஷாரா செவ்வந்தி ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாயுடன் நேபாளத்தில் ஒரே அறையில் சுமார் ஒரு மாதமாக தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் வேறொரு அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு அறைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேபாளத்தின் காத்மாண்டுவில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி, ஜே.கே.பாய், யாழ்ப்பாண சுரேஷ், தக்ஷி, கம்பஹா பாபா மற்றும் நுகேகொட பபி ஆகியோர் செப்டெம்பர் 13 திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        