விரைவில் போக்குவரத்து தடை நீக்கப்படும்! - அமைச்சர் நாமல்
எதிர்வரும் இரண்டு மாதங்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை விரைவில் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வந்த போதிலும் ஜனாதிபதியும். பிரதமரும் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை பாதுகாப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri