புதிய அறிவிப்பின் படி இலங்கையில் மாகாண எல்லைகளை கடக்கும் தகுதியுடையவர்களின் விபரம்
நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண எல்லைகளை கடப்பதற்கு தகுதியுடையவர்கள் தொடர்பிலும் குறித்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுகாதார சேவைகள், பொலிஸ், முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகள், முக்கியமான உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்வோர், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்கள், அத்தியாவசிய சேவை வழங்குநர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை), துறைமுகங்களுக்கான பொருட்கள் அல்லது போக்குவரத்து மற்றும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை) மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.