இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - வெளியானது சுகாதார வழிகாட்டல்
நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சுகாதார வழிகாட்டல்கள் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் இம்மாத இறுதி வரையில் அமுலுக்கு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் சுகாதார நடைமுறைகளுடன் வீடொன்றிலிருந்து ஒருவரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலமர்வுகள், கலந்துரையாடல்கள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன, ஆடைத்தொழிற்சாலைகள் கடுமையான சுகாதார நடைமுறையின் கீழ் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன, சுப்பர்மார்க்கட்டுகளில் 25 வீத வாடிக்கையார்களை அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது, Shopping Mallsஐ இன்று முதல் மூடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஆடையகங்களை கடுமையான சுகாதார நடைமுறைகளின் கீழ் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பகுதிநேர வகுப்புக்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன, திருமண நிகழ்வுகளை நடத்துவது நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் மாகாண எல்லைகளை கடப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
