முடக்கலை அறிவித்து மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
இலங்கையில் முடக்கலை அறிவித்து, மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வசதியான அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை நிராகரித்து, அரசாங்கம் முடக்கலை விதிக்கத் தவறினால் விளைவுகளுக்கான பொறுப்பை, அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மருத்துவமனைகளில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளனர். சில நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளிலும் அதிக சுமை ஏற்பட்டுள்ளது. தினமும் சுமார் 2500 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இரண்டு வார முடக்கலுக்கு செல்ல மருத்துவ நிபுணர்கள் விடுத்த கோரிக்கையை கோவிட் பணிக்குழு கவனிக்கவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் கோரிக்கை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டதல்ல, உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் ருவான் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு மற்றும் பால் மா பற்றாக்குறையை சுமுகமாக தீர்க்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதுடன் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் இரு எரிவாயுவுமே இன்று சந்தையில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
