சிறப்பு சுற்றுலா பேருந்துகளின் போக்குவரத்து உரிமங்களுக்கு தடை: பொலிஸ் ஊடகப் பிரிவு
இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மாற்றியமைத்து போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட 25 சிறப்பு சுற்றுலா பேருந்துகளின் போக்குவரத்து உரிமங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளுக்கமைய அவை மீளவும் உரிய முறையில் தயார்ப்படுத்தப்படும் வரை அவற்றை போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு
''கடந்த மாதம் பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் ஆபத்தான மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில பேருந்துகள் செலுத்தப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், குறித்த பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் வீதியில் பயணிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த பேருந்துகளின் உரிமையாளர்கள் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை அடையாளம் காண 54 பேருந்துகள் நேற்று திங்கட்கிழமை கொழும்புக்கு வரழைக்கப்பட்டதுடன், அவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.
சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
அவற்றில் 25 பேருந்துகள் வாடகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்றது என்பதுடன், சட்டவிரோதமான முறையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் மின்விளக்குகளின் மின் உபகரணங்கள் மற்றும் கண்கவர் அலங்கார பொருட்களை கொண்டு இரவு விடுதி போன்ற அமைப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
முற்று முழுவதுமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பாதுகாப்பற்ற முறையிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்ககூடிய வகையிலும் அவை காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பேருந்துகளை சட்ட விதிமுறைகளுக்கு அமைய மாற்றியமைக்கும் வரையில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த தற்காலிக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
