வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது(Photos)
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை

ஒமந்தை பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கி இன்று (14.10.2022) காலை மாடுகளை ஏற்றி சென்ற வாகனம் ஒன்றை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை

இதன்போது அனுமதிப்பத்திரமின்றி 11 மாடுகளை ஏற்றி செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டதுடன் குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த பொலிஸார் மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான்
நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri