யாழில் வழமைக்கு திரும்பியுள்ள போக்குவரத்து சேவைகள் (Photo)
இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன், இன்று (29.11.2022) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
யாழ்ப்பாண சாலை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திங்கட்கிழமை (28) காலை முதல் திடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்
இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.ச. யாழ். சாலை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக
வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளும் ஒன்றிணைந்து இன்றைய தினம்
பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri