சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்காலிக போக்குவரத்து ஏற்பாடுகள்:கொழும்பில் மூடப்பட்ட வீதிகள்
தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகைகள் காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (29) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 77 ஆவது தேசிய சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
அதனையொட்டி நடைபெறும் ஒத்திகைகள் காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குரவத்துத் திட்டமொன்றை பொலிஸார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
விசேட போக்குவரத்துத் திட்டம்
அந்தவகையில், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கருவாத்தோட்டம் – விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மேட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் வீதிகள்
77 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடான மேட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் என்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்தப் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வருகைதரும் வாகனங்கள் ஒத்திகையினை பாதிக்காத வகையில் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 26 நிமிடங்கள் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam