அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளர் வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இரண்டு வகையான வாய் மருந்துகளுக்கும் ஐந்து வகையான தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பற்றாக்குறை
அத்தோடு, மருந்துப் பதிவு, விநியோகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள் இந்தப் பற்றாக்குறையை பாதித்துள்ளதாகவும் புத்திக சோமவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமும், மாநில மருந்து ஒழுங்குமுறைக் கழகமும் இணைந்து உரிய மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு 28 வாய்வழி மருந்துகளும் 33 ஊசி மருந்துகளும் இன்றியமையாதவை என்றும் விசேட வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri