கொடுப்பனவுகளை நலன்புரி ஊடாக வழங்குதல் தொடர்பில் பயிற்சி
சமூக சேவை அலுவலர்கள் மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த நல புரி சேவைகள் தொடர்பான பயிற்சி திருகோணமலை மாவட்ட செயல உப ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (21) வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களம்,தேசிய முதியோர்களுக்கான செயலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த பயிற்சியானது மாவட்ட செயலக மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவனின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது. இந்தப் பயிற்சி நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம், முதியோர்கள் கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகள் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் கொடுப்பனவு ஆகிய மூன்று கொடுப்பனவுகளையும் எதிர்காலத்தில் ஒரே தரவுத்தள அமைப்பிற்குள் ஒருங்கிணைப்பதாகும்.
மேலும், இந்த ஒருங்கிணைந்த தரவு அமைப்பு, மாற்றுத் திறனாளிகளை பல்வேறு தேசிய மேம்பாட்டு மற்றும் நலத்திட்டங்களில் சேர்க்க உதவும் முக்கிய தளமாக இருக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சமூக சேவை அலுவலர்கள் மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிகழ்ச்சியின் போது, நலன்புரி உதவி புதிய செயலி ஊடாக புதிய பயிற்சி மற்றும் பதிவு தளத்திற்கான அறிமுகம் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் பயனாளிகளை அமைப்பில் பதிவுசெய்வதற்கான அவசியமான தேவைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
