கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
புதிய இணைப்பு
புத்தாண்டை முன்னிட்டு இன்று (14.4.2024) விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மணிக்கும், கோட்டையில் இருந்து காலி வரை இரவு 7.25 மணிக்கும் இரண்டு விசேட தொடருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
சில அலுவலக தொடருந்துகள் இன்று (14.4.2024) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை இலங்கை தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது.
விசேட நேர அட்டவணை
எனினும், நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விசேட நேர அட்டவணையின் கீழ் 6 தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan