இலங்கை மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து
இலங்கையில் கொண்டாடப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து
தாமும் தமது பாரியார் ஜில் பைடனும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் இந்த வாரத்தில் கொண்டாடப்பட்டும் பல்வேறு நாடுகளின் கலாசார நிகழ்வுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் அங்கமாக தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
As we welcome the Sinhala and Tamil New Year, a time for renewal, community, and unity, we extend our wishes of joy, gratitude, and prosperity to everyone celebrating in Sri Lanka and around the globe.
— State_SCA (@State_SCA) April 14, 2024