சீரற்ற காலநிலையால் தொடருந்து சேவைகள் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை வரையில் தொடருந்து சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.
தொடருந்து பாதையில் பாரிய குப்பை மேடு
மலையக புகையிரத பாதையில் நானுஓயா வரையில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (27) காலை ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் பாரிய குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
குப்பை மேடு இடிந்து விழும் போது, தொடருந்து உல்லாசப் பயணிகள் இதனைக் கண்டு தொடருந்து நிலையத்திற்கு அறிவித்த காரணத்தினால், நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகள் புகையிரதம் நிறுத்தப்பட்டது.
தொடருந்து தண்டவாளத்தில் விழுந்த குப்பைக் குவியலை அகற்றிய பின்னரே கொழும்பு நோக்கி தொடருந்து பயணித்ததாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
