தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: திணைக்களம் விளக்கம்
கொழும்பு - கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்சார ஊழியர்கள் குழு நேற்று ஆரம்பித்த அவசர தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே இத் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர தொழிற்சங்க நடவடிக்கை
இதனால் இன்று (24.08.2023) மாலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கத் திட்டமிடப்பட்ட 6 தொடருந்துகள் தாமதமாகச் செல்லும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மின்சார ஊழியர்கள் குழுவொன்று நேற்று (23.08.2023) பிற்பகல் ஆரம்பித்த அவசர தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே இன்று (24.08.2023) மாலை தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து கட்டுப்பாட்டாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் தொடருந்து மின்சார உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தொடருந்து சேவைகள் இரத்து மற்றும் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam