சிலாபத்திற்கான தொடருந்து சேவை:திணைக்களத்தின் அறிவிப்பு
புத்தளம் தொடருந்து பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
'டித்வா' சூறாவளியினால் நாட்டின் பல பகுதிகளிலுள்ள தொடருந்து பாதைகள் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.மலையக பாதைகளில் பாரிய சேதங்களும் மீளமைக்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்புப் பணிகள்
ஆனால் டித்வா ஏற்படுத்திய பாரிய வெள்ளம் ஏனைய பகுதிகளிலுள்ள ரயில் பாதைகளுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியதால் சில தொடருந்து சேவைகள் ஒரு மாதமாக நடைபெற்றவில்லை.

அந்த வகையில் கொழும்பு கோட்டை-சிலாபத்திற்கான தொடருந்து சேவையும் ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த தொடருந்து பாதைகள் புனரமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.