தனக்கு எதிராக பேச வேண்டாமென அர்ச்சுனா எம்.பியிடம் கெஞ்சிய என்பிபி பிரதியமைச்சர்
என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களே நான் கதைப்பது சரி என்று சொல்கின்றனர்.எங்களுக்கு சொஞ்சம் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்கின்றனர். வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.சரத் தனக்கு எதிராக பேச வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினார் என அர்ச்சுனா ராமநாதன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வடக்கில் 2499 வீடுகள் வழங்கப்படவுள்ளது. அந்த வீடுகளை கட்டித் தாருங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று கூறினேன்.
வடக்கில் 2499 வீடுகளுக்கு என்ன நடந்தது
இந்த வீடுகளுக்கு 2018 - 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து இலட்சம் முதல் எட்டு இலட்சம் வரை வழங்கியுள்ளனர்.அந்த பணத்தில் தூண்கள் எழுப்பப்பட்டு, கூரைகள் போடாமல் பல ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டப்படி இருக்கின்றன.
பிரதியமைச்சர் டி.பி.சரத்திடம் கேட்டேன், இம்முறை பாதீட்டிலாவது இந்த வீடுகளுக்கு ஒரு தீர்வை பெற்று தரமுடியுமா என்று கேட்ட போது அவர் அதை ஒத்துக் கொண்டு செய்து தருவதாக கூறியிருந்தார்.

சிலர் வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றேன். ஆனால் அமைச்சருக்கு தெரியாது. அந்த வீடுகளை கட்டி நீங்களே மக்களுக்கு கொடுத்து அரசியல் செய்து கொள்ளுங்கள்.
நான் எனது அரசியலை பார்த்துக் கொள்கிறேன். ஆனால் மக்களுக்கு வீடு கிடைப்பதென்றால் நான் சந்தோசப்படுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு