தொடருந்து தாமதமடைந்தமையினால் பலரையும் கவர்ந்த வெளிநாட்டவர்களின் செயல்
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு சென்ற பொடி மெனிக்கே தொடருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக நானுஓயா தொடருந்து நிலையத்திலிருந்து எல்ல தொடருந்து நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு குழுவினரின் செயற்பாடு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொடி மெனிகே தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாகும் என்று நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களின் செயல்
இதனையடுத்து, தொடருந்து வரும் வரை நிலையத்தின் ஒரு பக்கத்தில் கூடியிருந்த அனைத்து வெளிநாட்டினரும் பாடல்களை பாடி நடனமாடியுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2:55 மணிக்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை அடைய வேண்டிய தொடருந்து , மாலை 4.55 மணிக்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை நிலையத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri