கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் நடந்த விபரீதம்
நாரஹேன்பிட்டி, கீரிமண்டல மாவத்தையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்களில் பலர் அதே வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை வைத்தியசாலை நிர்வாகத்தினால், ஊழியர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளிடம் இருந்து மறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தின் பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் இந்த சம்பவம் தொடர்பில் எதுவுமே தெரியவில்லை என குறிப்பிடப்படுகிறது..
கடந்த தைப்பொங்கல் தினத்தில் நடைபெற்ற மதிய உணவு விருந்திலேயே உணவு விஷமாகியுள்ளது. இதன் போது ஏராளமான ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதால் வைத்தியசாலையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் குறித்து வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக தகவல் பெற முயற்சித்த போதிலும் அதிகாரிகள் அதற்கு பதிலளிக்காமல் அழைப்புகளை தவிர்த்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
