வவுனியாவில் தொடருந்து மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயம்
வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (31) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று காலை 9 மணியளவில் வவுனியா - அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து பொலிஸார் காயமடைந்துள்ளார்.

இந்தநிலையில், காயமடைந்த பொலிஸார் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan