அரசியல் மாற்றத்தால் ஒருபோதும் பொருளாதாரம் சீரமைக்கப்படாது : அநுர பகிரங்கம்
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதால் பொருளாதாரம் மாற்றம் பெறாது. அவ்வாறு நினைக்கவும் முடியாது. பொருளாதாரத்தை கட்டமைக்க அனைத்து துறைகளும் மீள் எழுச்சி செய்யப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்திற்கு இன்றையதினம் (31) வருகைதந்த ஜனாதிபதி, யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியிருந்தார்.
இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து சேவையை சீராக்க..
மக்களுடைய காணி நிலங்கள் மக்களுக்குரியது. அதே நேரம் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினை அல்லது தேவைப்பாடுகள் வந்தால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிலங்களை சுவீகரிப்பதும் அரசுக்கு அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தினர் தமது தேவைக்காக வைத்துக்கொண்டுள்ள காணி நிலங்களை விடவேண்டும் என கோரப்படுகின்றது.
அவசிய தேவைகள் குறிப்பாக அந்தக் காணிகளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்ட திட்ட வரைபை முன்வைத்தால் அவை தொடர்பில் கருத்தில் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் போக்குவரத்து சேவையை சீராக்க இணைந்த சேவையை நடத்துவது அவசியம் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி அதை முன்னெடுப்பதன் நோக்கம் குறித்தும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan