கடும் மழை காரணமாக கொழும்பில் அதிக வாகன நெரிசல்: தொடரும் சீரற்ற காலநிலை
கொழும்பில் (Colombo) பெய்து வரும் கடும் மழை காரணமாக கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, ஹலவத்த, ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் இவ்வாறான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் தீவைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |