வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் அவசர கூட்டம்

Mannar Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Climate Change Northern Province of Sri Lanka
By Kajinthan Nov 26, 2024 02:59 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டமானது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (26.11.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை (27.11.2024) நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள்

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள்

உயர்தரப் பரீட்சை

வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு தேவையான வாகன வசதிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலகத்தாலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் அவசர கூட்டம் | Emergency Meeting Climate Change Northern Province

மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு மாவட்டச் செயலர்கள் மூலம் எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலர், மழை காரணமாக 12, 629 குடும்பங்களைச் சேர்ந்த 43,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 1,547 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியனவற்றின் எந்தவொரு வீதிகளும் இதுவரை தடைப்படவில்லை என திணைக்களப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன : 3 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன : 3 குளங்கள் உடைப்பு

இடர்நிலைமை

பாதுகாப்பு நிலையங்களில் எந்தவொரு குடும்பங்களுக்கு தங்கவைக்கப்படவில்லை எனத் தெரிவித்த மேலதிக மாவட்டச் செயலர், இன்று மாலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரலாம் எனக் குறிப்பிட்டார். இதேவேளை கடற்றொழிலாளர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கையை வழங்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் அவசர கூட்டம் | Emergency Meeting Climate Change Northern Province

மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கையில், நெடுந்தீவிலிருந்து பரீட்சை விடைத்தாள்களை கொண்டு வருவதற்கும், வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கும் இப்போது கடற்படையினரின் உதவியே பெறப்படுவதாகவும், கடலில் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், தமது ஆளுகைக்கு உட்பட்ட 54 குளங்களில் 25 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன, என்றார். இதேவேளை வடக்கு மாகாணத்தின் பிரதான மூன்று குளங்களிலும் அதன் 50 சதவீத கொள்ளவை எட்டியுள்ளன என்றும் அவற்றை எதிர்காலத்திலும் கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு இப்போதே திறந்து விட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடர்நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு சகல தரப்பினருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

நினைவேந்தல்களை தடுக்க அரசாங்கத்துக்கு அனுமதி இல்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நினைவேந்தல்களை தடுக்க அரசாங்கத்துக்கு அனுமதி இல்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US