மட்டக்களப்பில் தீ விபத்து - பொலிஸாரின் அசமந்தபோக்கு என வர்த்தகர் ஒருவர் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka
By Kumar Jan 15, 2026 02:08 PM GMT
Report

மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் ஆதாரங்கள் கொடுத்தும், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என  மட்டக்களப்பு நகர் வர்த்தகர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம்(14.01.2026) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் திரைப்பட குழுவின் பொங்கல் வாழ்த்துக்கள்

போராட்டம் திரைப்பட குழுவின் பொங்கல் வாழ்த்துக்கள்

பொலிஸாரின் அசமந்தம்

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்த எனது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் எனக்கு கோடிக்கணக்கில் எனக்கு நஸ்டம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பில் தீ விபத்து - பொலிஸாரின் அசமந்தபோக்கு என வர்த்தகர் ஒருவர் குற்றச்சாட்டு | Traders Express Regret Over Fire In Batticaloa

இந்நிலையில், தீ விபத்து தொடர்பில் எனது ஹோட்டலில் பணியாற்றியவர்கள் போதுமான தகவல்களை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் இதுவொரு மின் ஒழுக்காக இருக்கும் என கருதினோம். ஆனால் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருப்பவர்கள் தெரிவித்த  முரண்பட்ட கருத்துகள் எனக்கு சந்தேகத்தை துண்டியது.

இதனையடுத்து, வர்த்தக நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தங்கியிருந்த வர்த்தக நிலையத்தின் சிசிடிவி கேமராவினை பரீசோதனை செய்த போது அவர்களின் கருத்துகள் எனக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

கோரிக்கை 

இது தொடர்பில், கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் சென்று குறித்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய இறுவெட்டுகளை வழங்கியிருந்தேன். அத்துடன் சம்பவம் தொடர்பான  விசாரணைகளை முன்னெடுக்குமாறு கூறியிருந்தேன்.

ஆனால் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது மின்னொளுக்கினால் ஏற்பட்டதாக மின்சாரசபை அறிக்கை தந்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பில் தீ விபத்து - பொலிஸாரின் அசமந்தபோக்கு என வர்த்தகர் ஒருவர் குற்றச்சாட்டு | Traders Express Regret Over Fire In Batticaloa

இது குறித்து, மின்சாரசபை உள்ள பொறியியலாளரிடம் கேட்டபோது தாங்கள் எந்த அறிக்கையினையும் வழங்கவில்லை என கூறுகிறார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி செயலகங்களுக்கும் அறிவித்துள்ளேன். எனது ஹோட்டல் எரிக்கப்பட்ட சம்பமானது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகவே இருக்கும் என்ற சந்தேகம் பலமாகவுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை முறையாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி 21 முதல்... ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

ஜனவரி 21 முதல்... ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

தமிழர் மரபை கொண்டாடும் லங்காசிறியின் நம்மவர் தைப்பொங்கல் விழா - LIVE

தமிழர் மரபை கொண்டாடும் லங்காசிறியின் நம்மவர் தைப்பொங்கல் விழா - LIVE


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US