தொடரும் வர்த்தக போர்: ட்ரம்புக்கு சீனா வழங்கியுள்ள ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையில் தீர்வு தேட விரும்பினால் வரிகளை இரத்து செய்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 145% வரி விதித்துள்ளது. பதிலடியாக, சீனாவும் அமெரிக்க தயாரிப்புகளுக்கு 125% வரி விதித்துள்ளது.
ட்ரம்ப் நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என கூறியிருந்தார்.
வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்த சீனா
ஆனால், சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட், இவை உண்மை அல்ல என்றும், எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவில் குறைக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதிலிருந்து, சீனாவுக்கு எதிரான வரி விவகாரத்தில் ட்ரம்ப் ஒரு மென்மையான அணுகுமுறையை நோக்கி திரும்பியிருப்பது தெரியவருகின்றது.
இந்நிலையில் சீனா, 80இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து, அமெரிக்க வரிகள், அவர்களின் முதலீடு மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
