இலங்கைக்கான நேரம் இது: எடுத்துரைக்கும் சர்வதேச நாணய நிதியம்
இலங்கையுடனான, தமது திட்டத்தின் அடுத்த மறுஆய்வு குறித்து விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்புகிறது.
இந்த கருத்தை, நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறையின் இயக்குனர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
இலங்கையுடனான தமது அமைப்பின் திட்டம் குறிப்பிடத்தக்க அளவு பேரண்ட ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்துள்ளது.
இது அதிக பொருளாதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கும் வழிவகுத்ததாக வோசிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனியார் முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பரந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
