நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள தொழிற்சங்கள்
அரச நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசு தொடர்ந்து சாதகமான பதில் வழங்காமையினால், ஏப்ரல் முதல் வாரத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட 18 தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
குறித்த தீர்மானமானது நிர்வாகப் பரீட்சை திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி தொழிற்சங்கத்துடன் நேற்று (22.03.2024) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்நிலையில் அண்மையில் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, நிறைவேற்று அதிகாரிகள் தம்மைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொழிற்சார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிய தீர்வுகள் எதிர்வரும் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் குழு தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி நிர்வாக சேவைகள் தொழிற்சங்கம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப தொழிற்சங்கம், கணக்காளர் தொழிற்சங்கம், பரீட்சை திணைக்கள தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |