பேருந்தில் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சேவை
மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை மாணவர்களுக்காக சிசுசெரிய பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த தனது மகள் யாரோ ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடற்படை சிப்பாய்
முறைப்பாட்டிற்கமைய, நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி விடுமுறையில் வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டும் உள்ள பாடசாலை பேருந்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் சாதாரண பயணியாக பயணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri