அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் - ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முக்கிய திட்டம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே மீண்டும் வெடித்துள்ள வர்த்தகப் போர்ச் சூழல் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட "டர்ன்பெர்ரி" வர்த்தக ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் பணிகளை நிறுத்திவைக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதன்கிழமை பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் முயற்சி
டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு ஐரோப்பா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "கிரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காவிட்டால் ஐரோப்பிய பொருட்கள் மீது புதிய வர்த்தக வரிகள் விதிக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை, தமது உறுப்பு நாடொன்றின் இறையாண்மையில் தலையீடு என்று கூறும் ஐரோப்பிய நாடாளுமன்றம் இதனை அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கருதுகிறது. இந்த தகவலால் உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் பங்குகள் அதிகமாகவும், ஐரோப்பியப் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நட்டத்தைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க டொலரின் மதிப்பு சரிந்துள்ள நிலையில், யூரோவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வர்த்தகப் போர் தொடர்பாக ஐரோப்பா ஏற்கனவே திட்டமிட்டு நிறுத்தி வைத்திருந்த காலக்கெடு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதியுடன் முடிகிறது.
நிதிச்சந்தைகளில் பெரும் சரிவு
இதன்படி புதிய ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படாவிட்டால், பெப்ரவரி 7ஆம் திகதியன்று, சுமார் 93 பில்லியன் யூரோ மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்கும்.

இந்தநிலையில் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள், ஐரோப்பாவை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளனர் "
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் நாளை டாவோஸ் வந்து தனது தரப்பு நியாயத்தை விளக்குவார்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்;.
இந்தச் சூழல் 2024-ல் மட்டும் சுமார் 1.6 டிரில்லியன் யூரோ மதிப்பிலான வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதால், உலகப் பொருளாதாரம் பெரும் கவலையில் உள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri