வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்
நாட்டின் புதிய வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் டிசம்பர் மாதத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் குறித்த சமீபத்திய கணக்கெடுப்பில், நவம்பரில் 43,810 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 48,525 ஆகவும் அதிகரித்துள்ளது.
வாகனங்களை வாங்குவதற்கான நிதி வசதி
மேலும், அறிக்கைகளின் படி மொத்தப் பதிவுகளில் 93.9% குறைவான (1000cc) எஞ்சின் வலு அல்லது 100 கிலோ வோட்டுக்கு குறைவான மின்சார வாகனங்கள் ஆகும்.இந்த வாகனங்களை வாங்குவதற்கான நிதி வசதிகளைப் பெறுவதற்கான சதவீதம் கிட்டத்தட்ட 50% என்று அறிக்கை கூறுகிறது.
இதற்கமைய, மோட்டார் வாகன பதிவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், முந்தைய மாதத்தில் 3,691 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 5,007 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில், நவம்பரில் 781 ஆக இருந்த மோட்டார் வாகன பதிவுகள் டிசம்பரில் 1,150 ஆக அதிகரித்துள்ளன. BYD பிரிவில் 408 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது.
Dolphin டால்பின் ரக வாகனங்களில் 263 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அல்டோ 1 145 மோட்டார் வாகனங்களையும் பதிவு செய்துள்ளது.
இதன்படி, BAW 283 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.டொயோட்டா 191 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தையும் பதிவு செய்துள்ளது.
இதற்கு கூடுதலாக, பெரோடுவா 99 ஆக்சியா 66 மற்றும் பெஸ்ஸா 33 யூனிட்களை பதிவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.இதேபோல், வுலிங் 50 யூனிட்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கிடையில், பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சந்தையில், நவம்பரில் 2,910 இல் இருந்து டிசம்பரில் 3,857 ஆக வாகன பதிவுகள் அதிகரித்துள்ளன.
இவற்றில் பயன்படுத்தப்பட்ட வாகனப் பதிவுகளில் 96% சிறிய மோட்டார் வாகனங்கள் ஆகும். 95% ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். இந்த வாகனங்களுக்கான நிதி விகிதம் 52.8% ஆகும்.
இவற்றில் சுசுகி 1,446 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.