வரலாற்றில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இந்த வருடம் 2026 ஜனவரியில் 277,327 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள தரவுகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள்
வரலாற்றில் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவே அதிகம் என்றும் அந்த அதிகாரசபை கூறுகிறது.

2025 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
ஒரே நாளில் பதிவான சுற்றுலாப்பயணிகள்
கடந்த ஜனவரி மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 அன்று நிகழ்ந்துள்ளது, அன்று 10,483 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலகட்டத்தில் இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நாட்டிலிருந்து 52,061 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 11 மணி நேரம் முன்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam