இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது மொத்தத்தில் 18% ஆகும்.
சுற்றுலாப்பயணிகள் வருகை
மேலும், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 06 வரை சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,386,228 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 346,057 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 135,323 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.